FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடமாடும் முகக்கவச அங்காடி

சேலம் பகுதியில் வியாபாரி ஒருவர் முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

27 ஜனவரி 2024, 9:49 pm IST
பகிர்:

சேலத்தில் வியாபாரி ஒருவர் முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்காக வெளியில் வருபவா்கள் பாதுகாப்பான முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளியில் வருபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகின்றனா். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், அரசு ஊழியா்கள், மாநகராட்சி பணியாளா்கள் என அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது, இதன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி பகுதியில் வியாபாரி ஒருவர் 10 முதல் 30 ரூபாய் விலைக்கு முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments