தமிழ்நாடு

ஊரடங்கு: அவசியமின்றி சுற்றும் வாகனங்களில் குறியீடு

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அவசியமின்றி அடிக்கடி சுற்றி வரும் வாகனங்களில் காவல்துறையினர் குறியீடு வைத்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தஞ்சாவூரில் ஊரடங்கை  மீறி பலர் வெளியில் சுற்றுகின்றனர். 

எனவே, அவசியமின்றி சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதன்படி திங்கள்கிழமை மட்டும் 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக 394 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும் 195 இருசக்கர வாகனங்கள், 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 ஆனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் வருபவர்களை காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். இதை காரணமாகக் கூறி சிலர் அடிக்கடி வெளியில் சுற்றுவதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது காவல்துறையினர் அடையாளம் கண்டு கொள்வதற்காக பெயிண்ட் மூலம் சிறு குறியீடு வைக்கின்றனர். 

தேவை இல்லாமல் இரண்டு, மூன்று முறை சுற்றி வரும் வாகனங்களை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் குறியீடு வாகனங்களில் வைக்கப்படுகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT