விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி
விழுப்புரத்தில் திமுக சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம் கட்டடத்தை கரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த திமுகவினர் வழங்கியுள்ளனர்.
விழுப்புரத்தில் திமுக சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம் கட்டடத்தை கரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த திமுகவினர் வழங்கியுள்ளனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் க. பொன்முடி, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சந்தித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
முன்னதாக சென்னை அண்ணாசாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கலைஞர் அரங்கை கரோனோ சிகிச்சைக்கா மையமாக பயன்படுத்திக் கொள்ள திமுக சார்பில் அனுமதி வழங்கி மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அளித்தார்.
Advertisement
இதேபோல, திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.