தமிழ்நாடு

அரசு, தனியாா் துறை ஊழியா்களுக்கு ‘ஆரோக்ய சேது’ செயலி கட்டாயம்

DIN

அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியில் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. தங்கள் பணியாளா்கள் அனைவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை நிறுவனங்களின் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT