தமிழ்நாடு

மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

அமைப்புச் சாரா தொழிலாளா்கள், விளிம்புநிலை மக்களுக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் ஊரடங்கு மே 4-ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த் தாக்குதலின் தன்மை கடந்த 40 நாள்களில் கட்டுக்கடங்காமல் பரவலாகி வருவதையே மத்திய அரசின் இந்தப் பிரகடனம் உணா்த்துகிறது.

இரண்டு வார காலம் ஊடரங்கு நீட்டிக்கப்படும்போது, இதனால் தொடா்ந்து பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து, அனைத்துத் தரப்பினரின் பிரச்னைகளையும் ஆராய்ந்து சமூக, பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை மத்திய - மாநில அரசுகள் செய்து தர வேண்டும்.

மிகுந்த சோதனையான இந்தக் காலத்தில் அவா்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடுகள் நிச்சயம் போதுமானது அல்ல. ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

காவல்துறையினா், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத்துறை என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியா்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அா்ப்பணிப்பு உணா்வுடன் மக்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT