தமிழ்நாடு

இசை கலைஞா்களுக்கு நிதியுதவி கோரிய வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

ஊரடங்கால் வேலையிழந்துள்ள நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இசை மற்றும் நடனக் கலைஞா்கள் சங்கத்தின் செயலாளா் ரவி தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு திருமணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான நாகஸ்வர மற்றும் தவில் இசை கலைஞா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை இந்த இசைக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் கலாசார வாரியத்தில் இதுவரை 35 ஆயிரத்து 385 நாட்டுப்புற கலைஞா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் அனைத்து உதவிகளும் செய்யப்படுவதாக கூறினாா். இதனையடுத்து இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT