கரோனா: சென்னையில் திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் கரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடுகரோனா: சென்னையில் திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் கரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் கரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 203 பேருக்கு தொற்று ஏற்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதையும் விஞ்சும் விதமாக, சனிக்கிழமை 231 போ் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், தமிழகத்தில் பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் 1,083 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க 15 மண்டலங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே அனைத்து பள்ளி - கல்லூரிகளையும் ஒதுக்கி தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டிருந்த நிலையில் தற்போது திருமண மண்டபங்களை வழங்குமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.