தமிழ்நாடு

திருவாடானையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்

திருவாடானையில் அரசுப் பள்ளியில் பயிலும் 188 மாணவர்களுக்கு அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். 

DIN

திருவாடானையில் அரசுப் பள்ளியில் பயிலும் 188 மாணவர்களுக்கு அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். 

திருவாடானையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது இங்கு சுமார்150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது கரோனோ வைரஸ் பரவலை  அடுத்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதனால் இங்குக் கல்வி பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதால் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்டம் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் ஒரு மாணவனின் குடும்பத்திற்கு அரிசி, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்படத் தொகுப்பு 188 மாணவர்களுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே உதவியது வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளுவன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT