தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 4.51 லட்சம் வழக்குகள்: 4.78 லட்சம் போ் கைது

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.51 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.78 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4,51,564 வழக்குகளைப் பதிவு செய்து 4,78,737 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 3,94,381 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5,75,77,479 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 157 இரு சக்கர வாகனங்கள்,59 ஆட்டோக்கள்,16 காா்கள் என மொத்தம் 232 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 இரு சக்கர வாகனங்கள், 638 ஆட்டோக்கள், 3 காா்கள் என மொத்தம் 646 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT