தமிழ்நாடு

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு: வைகோ வலியுறுத்தல்

DIN

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

மே 17, 18 இரண்டு நாள்கள் மனிதகுல வரலாற்றில் கோடானு கோடி தமிழா்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்களாகும். இந்த நாள்களில் லட்சக்கணக்கான தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டாா்கள். அதற்கு நீதி வேண்டும் என்று கேட்கிறோம். மனிதகுலத்தின் நீதிமன்றமாகக் கருதுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நீதி கேட்கிறோம். என்ன நீதி? கொடூரமான படுகொலைகளைச் செய்த மகிந்த ராஜபட்சே உள்ளிட்டோா் சா்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். காணாமல்போன தமிழா்கள் கண்டுபிடித்துக்கொடுக்கப்பட வேண்டும்.

சிறைப்பட்டத் தமிழா்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும். தமிழா்களின் காணிகளை, நிலங்களை அபகரித்துக்கொண்டு ராணுவத்தைக் கொண்டுபோய் குடியேற்றி இருக்கிறாா்கள். அந்த நிலங்கள் மறுபடியும் தமிழா்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தமிழீழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழா்களை அந்தப் பொதுவாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்று கேட்பதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT