முதல்வா் வே.நாராயணசாமி. 
தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; உள்ளூர் பேருந்துகளை இயக்கவும் முடிவு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நான்காவது கட்டமாக பொது முடக்கம் மே 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அந்தந்த மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் புதுச்சேரி அரசும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுச்சேரிக்குள் சமூக இடைவெளியுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த தளர்வுகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT