தமிழ்நாடு

மின் வாரிய ஊழியர் கழுத்து அறுத்துக் கொலை

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

DIN

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கனகசபை(51). கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், தனது இண்டாவது மனைவி சங்கீதாவுடன் வாழ்ந்து வந்தார். முதல் மனைவி அஞ்சம்மாள் கணவரை பிரிந்து 10 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதில் அஞ்சம்மாளுக்கு 2 மகன்கள் ஒரு மகளும்,அதே போல் சங்கீதாவுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கனகசபை திங்கள்கிழமை இரவு பணிமுடிந்து, கீழப்பழுவூர் துணை நிலையத்திலுள்ள ஓய்வு அறையிலே தங்கியுள்ளார்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை காலை மற்றொரு மின்பாதை ஆய்வாளர் செல்வகுமார், கனகசபையை பணிக்கு அழைக்கச் சென்ற போது, அங்கு கனகசபை கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல்துறைக்கும், உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பவைத்தனர். மேலும்,போலீஸôர் இது குறித்து வழக்குப் பதிந்து கனகசபை எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT