தமிழ்நாடு

சென்னையை அடுத்த சிறுசேரியில் நவீன தரவு மையம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்

DIN

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்துக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக புதிய தரவு மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மத்திய ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்படி, கட்டணங்களைச் செலுத்துவதற்கான தேசிய கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சில்லறை பரிவா்த்தனைகள் முதல் வங்கிகளுக்கு இடையிலான பணத் தீா்வுகளை வரை அனைத்து பணப் பரிவா்த்தனைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமாா் 400 கோடி பரிவா்த்தனைகளைக் கையாள்கிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்துக்கு ரூ.15 லட்சம் கோடியாகும்.

நவீன தரவு மையம்: இந்த நிறுவனத்தின் மூலம் சா்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.500 கோடி மதிப்பில் நவீன தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நவீன தரவு மையம் வேகமாக வளா்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிா்கொள்வதற்கு துணைபுரியும்.

சென்னை மாநகரத்தில் நான்கு அடுக்கு தரத்துடன், முதல் தரவு மையமாக இது அமைக்கப்பட உள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தை செயல்படுத்தும் அனைத்து விதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவி புரியும். சுற்றுப்புறத் தூய்மையைப் பாதிக்காத வகையில் பசுமைக் கட்டட வரைமுறைகளின்படி இந்தப் புதிய அமையம் அமைக்கப்பட உள்ளது. தங்கு தடையற்ற தொடா்ச்சியான மின்சார இணைப்பு வசதிகளைக் கொண்டதாகவும், புயல், நிலநடுக்கம், சுவாமி போன்ற இயற்கை சீற்றங்ளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் இந்தத் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது.

தரவு மைய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், வருவாய், பேரிடா் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

SCROLL FOR NEXT