முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் இருந்து வடமாநிலத்தவர்கள் அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முப்பது பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முப்பது பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பத்து பேர் குல்பி ஐஸ் விற்றுக்கொண்டிருந்தனர். மேலும் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் மேலும் 20 பேர் என மொத்தம் 30 பேர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதமாக வருமானமின்றி தவித்து வந்தனர்.

அவர்கள் அனைவரும், வருவாய்த்துறையினரிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்பேரில் கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, 30 பேரையும் தனிப்பேருந்தில் சேலம் வரையிலும், அங்கிருந்து ரயில் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்தார். 

அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்தில் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. அவர்கள் அனைவரையும், கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, விஏஒ(பொ)அசோக்குமார், உதவியாளர் கார்த்தி உள்ளிட்டோர் அனுப்பிவைத்தனர்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேருக்கும் புதன்கிழமை மாலை, சேலம் அரசு கலைக்கல்லூரியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சேலத்திலிருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல புதன்கிழமை இரவு 9மணி ரயிலில் பயணிக்க உரிய ஏற்பாடுகள் அனைத்தும் வருவாய்த்துறையினர் செய்திருந்தனர். தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைத்த தமிழக அரசுக்கு, அவர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.