முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவிலில் கள்ளநோட்டு அடிக்க உடந்தையாக இருந்தவர் கைது; கள்ளநோட்டுகள் பறிமுதல் 

நாகர்கோவிலில் கள்ளநோட்டு அடிக்க உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்  செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

நாகர்கோவிலில் கள்ளநோட்டு அடிக்க உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்  செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபானங்கள் வாங்கினார். அப்போது அந்த நோட்டுகள் மீது கடை மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த போலீஸார் ரூபாய் நோட்டுகளை பரிசோதித்த போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரித்த தனிப்படையினர் திருமயத்தை சேர்ந்த முகமது நசுருதீன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களுடன் தொடர்புடைய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 900 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.   கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டவர் நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படையினர் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸாரின் உதவியுடன் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை கைது செய்தனர். 

அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 2 ஆயிரம், 200, 100, 20, 10 கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு ரூ.64 லட்சத்து 91 ஆயிரத்து 540 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னையில் பொருள்காட்சி நடத்துவதற்கு ஏஜெண்டாக செயல்பட்டு வந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.