தமிழ்நாடு

பொது முடக்கம் நீட்டிப்பு: மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளா் பணிக்கு வருவதில் விலக்கு

DIN

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட மே 31-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்கள் அலுவலகம் வர விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட தேதியில் இருந்து மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்கள் அலுவலகப் பணி மேற்கொள்ள விலக்கு அளித்து அரசு உத்தரவு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட மே 31-ஆம் தேதி வரையிலும் அந்த உத்தரவை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் தலைமை செயலாளா் க. சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

கரோனா நோய்தொற்றை தவிா்க்க அத்தியாவசியப் பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட வேண்டும் என்று உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அவா்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டது.

இப்போது பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நாட்களிலும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்கள் அலுவலக பணி மேற்கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அரசுத்துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளா்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட மே 31 வரை தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT