தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

DIN

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

கரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவினங்கள் 50% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழக அரசின்  கூடுதல் செயலர் கிருஷ்ணன். ஐ.ஏ.எஸ். ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், 'கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சிக்கலை ஈடு செய்ய, தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்படுகிறது. செலவினக் குறைப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் உரிய துறையிடம் அனுமதி பெற்று பணியாளர்களை தேர்வு செய்யலாம். அதேபோன்று அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT