தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் அர்ச்சகர்கள் உள்பட 270 பேருக்கு நிவாரணம்

வைத்தீஸ்வரன் கோயிலில் அர்ச்சகர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கார் வேன் ஓட்டுனர்கள் உள்பட 270 பேருக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி நிவாரண உதவியை வழங்கினார்.

DIN

வைத்தீஸ்வரன் கோயிலில் அர்ச்சகர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கார் வேன் ஓட்டுனர்கள் உள்பட 270 பேருக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி நிவாரண உதவியை வழங்கினார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவியில் பணியாற்றும் சிவாச்சாரியர்கள், பணியாளர்கள், சிப்பந்திகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், திருப்பணி பணியாளர்கள் மற்றும் கார் வேன் ஓட்டுநர்கள் என உள்ளிட்ட 270க்கும் மேற்பட்டோருக்கு அதிமுக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி ஒவ்வொருவருக்கும் நிவாரணமாகக் காய்கறி, அரசி, மளிகைப்  பொருட்கள் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை வழங்கினார். 

அரசு அறிவித்த சமூக இடைவேலியை பின்பற்றி அனைவரும் நிவாரணத்தைப் பெற்றுச் சென்றனர். இதில் அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி , மாவட்ட பொருளாளர் செல்லையன் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஸ்பெயினில் மாபெரும் பேரணி!

பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? -தேஜஸ்வி யாதவ் பதில்!

அதிமுக தொண்டர்களை திமுகவுக்கு அனுப்பி வைத்தவர் தினகரன்: ஆர்.பி. உதயகுமார்

மே.வங்கத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி!

பல அஜித்குமார் பலியாக நேரிடும்! திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

SCROLL FOR NEXT