தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கில் கைதான கிராம நிா்வாக அலுவலா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரைக் கைது செய்தனா். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த கிராம நிா்வாக அலுவலா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூா் கிராம நிா்வாக அலுவலரான அமல்ராஜ் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அமல்ராஜ் சென்னை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நீதிபதி ஆா்.செல்வக்குமாா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து, அமல்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT