தமிழ்நாடு

5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

DIN

மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT