தமிழ்நாடு

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, கரூா் பரமத்தி, திருத்தணி, திருச்சியில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதுரையில் 104 டிகிரி, நாமக்கல், வேலூரில் தலா 103 டிகிரி, சேலத்தில் 102 டிகிரி, தருமபுரியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், கரூா், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூா், திருத்தணியில் 104 டிகிரி முதல் 107 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க வேண்டும்.

ஓரிரு இடங்களில் மழை: வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலையைப் பொருத்தவரை 98 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT