தமிழ்நாடு

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

இலவச மின்சாரத்தை நிறுத்த முயற்சிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலவச மின்சாரத்தை நிறுத்த முயற்சிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவி முத்துவிஜயா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இலவச மின்சாரத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு நிறுத்த முயற்ச்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு துணை போகிறது. விவசாயிகளுக்கு விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வரும் வேளையில் இலவச மின்சாரத்தை நிறுத்துவதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திட வேண்டும் என்று அறிவித்த நிலையில் தூத்துக்குடியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவி முத்துவிஜயா தலைமையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி பணிமனை முன்பிருந்து இன்று காலை கருப்பு கொடி கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிகளில் ஊரடங்கு கால கட்டத்தில் 5 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு மகராசி மாவட்டச்செயலாளர், மாலா வடக்கு மண்டல தலைவி, காயத்ரி மாவட்ட பிரதிநிதி, சாந்தி தெற்கு மண்டல தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT