முகப்பு
குடவாசலில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு

பேரளம், குடவாசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அனைத்து விவசாய சங்கங்களின் ஓருங்கினைப்புக் குழு சார்பில் பேரளம் மற்றும் குடவாசலில் புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
குடவாசலில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
பகிர்:

அனைத்து விவசாய சங்கங்களின் ஓருங்கினைப்புக் குழு சார்பில் பேரளம் மற்றும் குடவாசலில் புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
 
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தோடு இணைத்ததைக் கைவிடவேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வரி பாக்கியையும், கரோனா நிவாரண நிதியையும் உடனடியாக வழங்கிட வேண்டும். அனைத்து தூர்வாரும் பணிகளையும் ஜூன் 12ஆம் தேதிக்குள் முறைகேடின்றி முடித்திட வேண்டும். மின்சார சட்டம் 2020 ஐ திரும்பப் பெறவேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக புதன்கிழமை காலை பேரளம் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர்கள் எம்.இ.ராமமூர்த்தி சிபிஎம், ஜெ.ராமமூர்த்தி சிபிஐ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தியாகு. ரஜினிகாந்த், மாவட்ட துணைத்தலைவர் கே.தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அல்போன்ஸ், ஆர்.ரத்தினசாமி வரத.வசந்தராஜன், வீரமோகன் ஆகியோர் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் குடவாசல் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ ஒன்றிய செயலாளர் ஏ.சுப்ரவேலு, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றிய பொருளாளர் என்.துரைமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.அந்தோணிசாமி,  எஸ்.பி.கண்ணன் சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் சுதாகர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →