தமிழ்நாடு

முதல் வெள்ளிக்கிழமையான ஜூன் 5-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்

பொதுமக்களுக்கு இலவச பொருட்களை விநியோகம் செய்ய வசதியாக முதல் வெள்ளிக்கிழமையான ஜூன் 5-ம் தேதி பொது விநியோகக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: பொதுமக்களுக்கு இலவச பொருட்களை விநியோகம் செய்ய வசதியாக முதல் வெள்ளிக்கிழமையான ஜூன் 5-ம் தேதி பொது விநியோகக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வழக்கமாக பொதுவிநியோகக் கடைகள், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை விடப்படும்.

ஆனால், ஜூன் மாதத்துக்கான இலவச பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக வரும் ஜூன் 5ம் தேதியான முதல் வெள்ளிக்கிழமை பொதுவிநியோகக் கடைகள் செயல்படும் என்று பொது வழங்கல் துறை அறிவித்துள்ளது.

ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக ஜூன் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். பொதுமக்கள் தங்கு தடையின்றி இலவச பொருட்களை வாங்க ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT