முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கரோனா தொற்று

​தமிழகத்தில் புதிதாக 658 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 710. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 117. சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 559. 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று மட்டும் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,548 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 8,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →