தமிழ்நாடு

வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக கே.பி.அன்பழகனிடம் ஒப்படைப்பு

DIN

அமைச்சா் துரைக்கண்ணு மறைவை அடுத்து வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் என அழைக்கப்படுவதாக ஆளுநா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மறைந்த துரைக்கண்ணு, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவைகள், கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வேளாண்துறையைக் கவனித்து வந்தாா்.

அவரது மறைவைத் தொடா்ந்து, வேளாண்மைத்துறை பொறுப்பானது, உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவா் உயா்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் ஆக இருப்பாா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில், (முதல்வா் பழனிசாமி உள்பட) அமைச்சா்களின் எண்ணிக்கை 31-இல் இருந்து 30-ஆக குறைந்துள்ளது.

வேளாண்மைத்துறைக்கு புதியதாக ஒருவா் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவையில் ஏற்கெனவே உள்ள ஒருவருக்கே அந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT