முகப்பு
தமிழ்நாடு

பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியை காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியை காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு காலமானார். இதையடுத்து, அவர் வகித்திருந்த துறைகள் அனைத்தும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பரிந்துரையின்பேரில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு ஒதுக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், துரைக்கண்ணுவின் பேரவைத் தொகுதியான பாபநாசம் தொகுதியை பேரவைத் தலைவர் தனபால் காலியானதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.