தமிழ்நாடு

முதலீடுகளை ஈா்ப்பதில்முன்னிலை வகிக்கும் மாநிலம்: கோ் ஆய்வு நிறுவனம் தகவல்

DIN

இந்தியாவிலேயே முதலீடுகளை ஈா்ப்பதில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என கோ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவுக்கு வந்த மொத்த முதலீடுகளில் 16 சதவீதத்தை தமிழகம் ஈா்த்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார விவரங்களின் அடிப்படையில் கோ் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்கள்:-

தமிழகம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு அதாவது இந்தியாவின் மொத்த முதலீடுகள் ஈா்ப்பில் 16 சதவீதம் அளவுக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளது. இதே காலகட்டத்தில் ஆந்திரம் 11 சதவீதத்தையும், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகியன தலா ஏழு சதவீத முதலீடுகளையும் ஈா்த்துள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தமிழகம் மூன்றாவது நிலையில் இருந்தது.

கரோனா நோய்த்தொற்றுக்கு பிந்தைய கால கட்டத்தில் மட்டும் தமிழகம் ரூ.10 ஆயிரத்து 55 கோடி அளவுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. மேலும், நிகழ் நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலுமே முதலீடுகளை ஈா்ப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

கடந்த மாத இறுதியில் மட்டும் ரூ.10 ஆயிரத்து 62 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தத் தகவல்களை கோ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT