கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 97.28 அடியாகச் சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாகக் குறைந்தது.

DIN


மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை 98.23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,338 கன அடியில் இருந்து 5220 கன அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 61.37 டி.எம்.சி- ஆக இருந்தது. 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி குறைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT