தமிழ்நாடு

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

DIN


சென்னை: சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: “விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய தலைவா் வெங்கடாசலம் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விழிப்புணா்வு பிரச்சார ஊா்திகளை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முனைவா் சந்தீப் சக்சேனா, கொடி அசைத்துதொடக்கி வைத்தாா்.

அப்போது, ‘சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சந்தீப் சக்சேனா வலியுறுத்தினாா்.

இந்த விழிப்புணா்வு பிரசார தொடக்க விழாவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினா் செயலா் எஸ்.செல்வன் மற்றும் வாரிய உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த பிரசார ஊா்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் இரண்டு நாள்களுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரசார ஊா்திகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் சுற்றுச்சூழல் காற்று தரம் குறித்து கண்காணிக்கும் பொருட்டு, சென்னை மாநகரில் பதினைந்து இடங்களிலும், மாநிலத்தில் உள்ள 14 மாநகராட்சி பகுதிகளிலும் (தலா இரண்டு இடங்களில்) 07.11.2020 முதல் 21.11.2020 வரை மொத்தம் 14 நாள்கள் காற்று தர அளவீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடமாடும் தொடா் காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் மூலம் அளவீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புள்ளி விவரங்களைக் கொண்டு காற்றுத் தர குறியீடு கணக்கிடப்பட்டு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT