தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

DIN

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திகுட்டையில் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பெத்திகுட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன். இவரது தோட்டத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெத்திக்கட்டை வனச்சரகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய ஒற்றை ஆண்காட்டுயானை முருகேசன்  தோட்டத்தில் நுழைந்து வாழை களை சேதப்படுத்தியுள்ளது. பின்னர் தோட்டத்தினை கடந்து மற்றொரு வனப்பகுதிக்குள் நுழைய முற்பட்டபோது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து புதன்கிழமை காலை யானை உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சட்டவிரோத மின்வேலி குறித்து ஆய்வு செய்து தோட்ட உரிமையாளரான முருகேசன் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT