தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றக் கிராம மக்கள் கோரிக்கை மனு

DIN

அம்மணம்பாக்கம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றிப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்யுமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு அருகே அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 200க்கும்  மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக  வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை  காரணமாக  அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அம்மணம்பாக்கம் பகுதிக்குச் சென்று மழைநீர் தேங்கிய வீடுகளில் வசித்து வந்த சுமார் 25க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பாதுகாப்பாகத் தங்கவைத்தனர்.

இந்தநிலையில், ஒரத்தூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர்த்தேக்கத்தில் இருந்து அம்மணம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வரும் வகையில் உள்படுகை நீர்மாற்று கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அம்மணம்பாக்கம் பகுதியில் ஏரிக்கு அருகே அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்படும் என அண்மையில் மழைநீர் சூழ்ந்ததால், அம்மணம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட வந்த அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகத் தெரிகிறது. 

இதனால் அச்சமடைந்து அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியை புதன்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில் தாங்கள் அப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், வீட்டுவரி மற்றும் மின் இணைப்பு பெற்றுள்ளதோடு அரசின் அனைத்து அடையாள அட்டைகளையும்  அம்மணம்பாக்கம்  விலாசத்தில் தான் வைத்திருப்பதாகவும், நாங்கள் பாதுகாப்புடன் வாழ எங்கள் பகுதியில் உள்ள மழைநீரை அகற்றி அதே இடத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT