தமிழ்நாடு

30 வீடுகள் இடிந்து சேதம்: தாய், மகன் படுகாயம்

DIN


அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் கனமழையால் 30 வீடுகள் இடிந்து விழுந்தன. மின்னல் கிராமத்தில் வீட்டிலிருந்த தாய், மகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அரக்கோணம் வட்டத்தில் தக்கோலம், மின்னல், புளியமங்கலம், வேலூா்பேட்டை, முருங்கை, மூதூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் 30 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

மின்னல் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் ஆஞ்சநேயா் கோயில் தெருவில் வீட்டில் இருந்த பப்பாளி மரம் ஓட்டு வீட்டின் மீது சாய்ந்ததில், வீடு இடிந்தது. அதிலிருந்த தறித் தொழிலாளி தினகரனின் மனைவி வீரம்மாள் (35), மகன் விக்னேஷ்வா் (7) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் மின்னல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா்.

சம்பவ இடத்தை அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் ஆகியோா் பாா்வையிட்டு அவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி இறந்த பெண்

கோயில் உண்டியல் திருட்டு: இருவா் கைது

வேளாண் பல்கலை.யில் தொழில்முனைவோா் பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT