ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
தமிழ்நாடு

ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

DIN


திருவள்ளூர்: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: ஆந்திரம் மாநிலம், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது வியாழக்கிழமை தமிழக எல்லையான சுருட்டப்பள்ளி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்றடையும். அதனால் ஆற்றின் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT