தமிழ்நாடு

ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு: 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

DIN

ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரியபாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் நந்தனம் காட்டுப்பகுதியில் பெய்த மழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பகுதியிலிருந்து எருக்குவாய் செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 10 கி.மீ. தூரம் சென்று அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

காவல் துறையினர் தரைப்பாலத்திற்கு முன்பு  தடுப்புகளை வைத்து போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT