முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
பேரறிவாளன்
பகிர்:

பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கோரிய மனுவில், மேலும் ஒரு வாரம் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் 30 நாள்கள் மட்டுமே பரோல் அளித்திருந்தது. பின்னர் இரண்டு வாரம், ஒரு வாரம் என இருமுறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரறிவாளன் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவருக்கு சிகிச்சையளிக்க 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டுமென பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் முந்தைய விசாரணை கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திங்கள்கிழமை(நவ.23) முதல் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் பேரறிவாளனின் மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.