தமிழ்நாடு

சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 11,109 -ஆக குறைந்தது

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 11,109 - ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1.4 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 1.18 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 6.4 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 392 போ், கோவையில் 145 போ், செங்கல்பட்டில் 77 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 96.5 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, வெள்ளிக்கிழமை மட்டும் 1,494 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 54,826-ஆக அதிகரித்துள்ளது.

12 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,681-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT