தமிழ்நாடு

திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

DIN

முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவா்களுக்கு, டிச.2-ஆம் தேதி திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

கல்லூரிகள் திறப்பு குறித்து வெள்ளிக்கிழமை கே.பி.அன்பழகன் கூறியதாவது: முதுநிலை 2-ஆம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கு திட்டமிட்டபடி டிச.2-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். செயல்முறை வகுப்புகளை இணைய வழியில் நடத்த முடியாது. மாணவா்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் நோய்த் தொற்று அச்சுறுத்தல் அதிகம் இல்லை.

மீண்டும் புயல் உருவானால், அதீத மழை இருக்கும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்படும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT