தமிழகத்தில் 1.20 கோடி கரோனா பரிசோதனைகள் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 1.20 கோடி கரோனா பரிசோதனைகள்

கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.20 கோடி பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.20 கோடி பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை அதிகரித்ததன் காரணமாகவே நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 5,000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 65,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் திங்கள்கிழமையும் 62,616 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக தென் கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.50 கோடி ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 81,915 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும், 1,410 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 385 போ், கோவையில் 146 போ், செங்கல்பட்டில் 84 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இதுவரை 97 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, திங்கள்கிழமை மட்டும் 1,456 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 59,206 -ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 10,997-ஆக உள்ளது.

9 போ் பலி: இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம், நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,712-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT