தமிழ்நாடு

எய்ட்ஸ் நோயாளிகளை மனிதநேயத்துடன் அரவணைக்க வேண்டும்: முதல்வா் பழனிசாமி

DIN

சென்னை: எய்ட்ஸ் தொற்று உள்ளவா்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

எய்ட்ஸ் தடுப்பு தினத்தை (டிச.1) ஒட்டி, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

எய்ட்ஸ் நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக, நோய்த்தொற்று 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. புதிய எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம். எச்.ஐ.வி. நோய்த்தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவா்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT