எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்: ரஜினி 
தமிழ்நாடு

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்: ரஜினி

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தி முடித்த நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவு குறித்து இன்று நிச்சயம் தெளிவுபடுத்துவார் என்று பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்று, எதிர்பார்ப்பை மேலும் சில காலத்துக்கு நீட்டித்துள்ளார்.

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளா்கள் 38 போ் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு, போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். மாவட்ட செயலாளர்கள் அவர்களுடைய கருத்தை, என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னார்கள். நானும் எனது பார்வையை கருத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

எனவே, நான் எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கூட இருப்போம் என்று ரஜினி மன்ற நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

விரைவில், நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்" என்று கூறிய ரஜினி, செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்து கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT