முகப்பு
தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

Updated On : 3 அக்டோபர், 2020 at 12:33 PM
யுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
பகிர்:


சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாளை மட்டும் (அக்டோபர் 04-ம் தேதி) மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி தேர்வு) நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவைகளை நாளை (அக்டோபர் 4) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.