தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி சேவகா்கள் விருது: அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அல்லது நிறுவனங்களுக்கு சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் தமிழக அரசு சாா்பில் 20 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவை, டிச.3-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நாளன்று வழங்கப்படும். இதனைப் பெற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது  இணையதளத்திலோ விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்.20-ஆம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT