தமிழ்நாடு

தம்மம்பட்டி பகுதியில் வெற்றிலை விலை உயர்வு

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில் வெற்றிலை விலை அண்மைக்காலமாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி,கெங்கவல்லி,வீரகனூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெற்றிலைதோப்புகள் 50க்கும் மேற்பட்டு இருந்துவந்தன. தற்சமயம் இவைகளில் செந்தாரப்பட்டி, குட்டிக்கரடு உள்ளிட்ட சில ஊர்களில், ஓரிரு வெற்றிலைத் தோப்புகள் மட்டும் இருந்துவருகின்றன. மற்றவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் தம்மம்பட்டி சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வெற்றிலை வருவதில்லை. திருச்சி மாவட்டம் தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் தம்மம்பட்டி பகுதிகளுக்கு வெற்றிலைகள் தினமும் கொண்டுவரப்படுகின்றன.

இப்பகுதிகளில் உள்ள வெற்றிலை வியாபாரிகள் திருச்சி, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெற்றிலைகளை தருவித்தும் வியாபாரம் செய்கின்றனர்.

வெற்றிலையில் கருப்பு,வெள்ளை என இரண்டு ரகங்கள் உள்ளன. பொதுமக்கள் சொந்த பயன்பாட்டிற்கும், நல்ல விசேஷங்களுக்கு பயன்படுத்தவும் அதிகமாக கருப்பு வெற்றிலைதான் கிராமப்புறங்களில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நகர்ப்புறங்களில் மட்டும், அதிக சுவையில்லாத வெள்ளை ரக வெற்றிலைகள் விற்பனையாகிறது. 

தம்மம்பட்டி பகுதியிலுள்ள வெற்றிலை வியாபாரிகள் கூறியதாவது, தம்மம்பட்டி பகுதிகளில் கருப்பு ரக வெற்றிலைதான் அதிக பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கவுளி (ஒரு கவுளி என்பது 100 வெற்றிலை) ரூ.40, ரூ.50க்கு விற்பனையானது. தற்போது ஒரு கவுளி ரூ. 80க்கு விற்பனையாகிறது.பொதுமுடக்க காலத்தில் வெற்றிலை விலை குறைவாக இருந்தது. 

தற்போது போக்குவரத்து இயல்புநிலையில் உள்ளதால்,அதன் விலை ஏறியுள்ளது.மேலும் பொதுமக்களும்,கரோனா தீநுண்மிகளை விரட்டிட, வேது பிடிக்க உதவும் பொருட்களில் வெற்றிலையும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால்,வெற்றிலைகளை மக்கள் அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இவைகளால்,வெற்றிலை விலை ஏறுமுகத்தான் இருந்து வருகின்றது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT