கொடைக்கானலில் இடியுடன் பலத்த மழை
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் இருந்தது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டம் நிலவியது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மிதமான வெயிலும், மேகமூட்டமும் காணப்பட்டது. தொடர்ந்து, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
Advertisement
இந்த மழையானது கொடைக்கானல், பாம்பார்புரம், வட்டக்கானல், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. தற்போது பெய்த மழையால் பனியின் தாக்கம் குறையும் நிலை இருப்பதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.