நெல்லை சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாடுநெல்லை சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி அருகேயுள்ள அபிஷேகப்பட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் எதிரே எம்.எஸ்.யூ. நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வராஜ்(45), நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார்.
இவர், சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கீழே இறங்கி பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்கநகைகள், ரூ.1200 பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.