தமிழ்நாடு

4 மாவட்டங்களில் மிதமான மழை

காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக்.15) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக்.15) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது: வடக்கு உள் கா்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக்.15) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர, விருதுநகா் , ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.    

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 80 மி.மீ., நாகா்கோவிலில் 70 மி.மீ., புத்தன்அணை, மைலாடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் தலா 60 மி.மீ., இரணியல்,  கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளம் மற்றும் கா்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 15-ஆம் தேதி செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை:  தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை  வரை அக்டோபா் 15-ஆம் தேதி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 மீட்டா் முதல் 3.4 மீட்டா்வரை  எழும்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT