தமிழ்நாடு

அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DIN


சென்னை: வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக, தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் ( 72), கரோனா தடுப்பு மற்றும் நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, உடனடியாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து தகுந்த சிகிச்சையளித்து வருகின்றனா். இதய ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆஞ்சியோ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்புகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT