தமிழ்நாடு

அண்ணா பல்கலை விவகாரத்தில் சூரப்பாவின் செயல்பாடு ஒழுங்கீனமானது: சி.வி.சண்முகம்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திடம், சூரப்பா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது அவர் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்ந்த அந்தஸ்துக்கு மாற்றவேண்டும் எனத் துணைவேந்தர் கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக, தமிழக அரசு அமைச்சரவை தலைமையில் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறது. அது நிலுவையில் உள்ளது.

இதில் தமிழக இட ஒதுக்கீடு தொடர்பாக எவ்வித பாதகம் இருந்தாலும் அதனை அரசு ஏற்காது எனச் சட்டப்பேரவையில் தெள்ளத்தெளிவாகத்  தெரிவித்து விட்டோம். இதில் சில சரத்துக்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதால், அது குறித்து விளக்கம் கேட்டபோது பதில் அளிக்கவில்லை. அதனால் இது சாத்தியமில்லை எனத் தெளிவாகக் கூறி விட்டோம்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வேந்தராக உள்ள சூரப்பா, அவருக்கு மேல் வேந்தர், அரசும் உள்ளதை மீறி, மத்திய அரசைத் தொடர்புகொண்டு, பல்கலைக்கழகத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்வதாகவும், அதற்கான ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதை எப்படிச் செய்வார் என்று தெரியவில்லை. அவரது செயல் ஒழுங்கீனமானதாகும். இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார் சிவி சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT