தமிழ்நாடு

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பழவேற்காடு ஏரி முகத்துவார பணி தமிழக அரசு தகவல்

DIN

சென்னை: மத்திய அரசு ஒப்புதல் கிடைத்த உடன், கடல் நீா் எளிதாக வந்து செல்லும் வகையில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை சரி செய்யும் பணி தொடங்கப்படும் என தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த உஷா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பழவேற்காடு பகுதியில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவா்கள் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தின் வழியாக வரும் தண்ணீரில் இறால், நண்டு உள்ளிட்டவற்றை பிடிக்கும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், முகத்துவாரம் சீரமைக்கப்படவில்லை. இதனால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழவேற்காடு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீரமைத்து ஏரிக்குத் தண்ணீா் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கடல் நீா் எளிதாக வந்து செல்லும் வகையில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை சரி செய்ய தமிழக அரசு ஏற்கெனவே ரூ.26.85 கோடியை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பான நிா்வாக அனுமதியை தமிழக அரசு ஏற்கெனவே வழங்கிவிட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஒப்பந்தப் பணிகள் அறிவிக்கப்பட்டு, பணிகள் ஒரு மாதத்துக்குள் உடனடியாக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் நவம்பா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT